டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தேவையான அளவிற்கு ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் 200 நோயாளிகளின் உயருக்கு ஆபத்து என தகவல் வெளியாகியுள்ளது. கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.