Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை…. நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்….. பெரும் பரபரப்பு… !!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள 6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரதி, சந்தோம், முகுந்த், சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. தீரத் ராம் ஷா, யூகே மருத்துவமனையிலும் முற்றிலும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |