ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் வாங்குவதற்காக பல நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.
எதீரியம் இணை நிறுவனர் விட்டாலிக் புட்டரின் இந்தியாவுக்கு கோவிட்-19 நிவாரணத் தொகையாக சுமார் 6,06,110 டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.4.5 கோடி அறிவித்துள்ளார். எத்தேரியம்க்கு ஈதர் என்ற நாணயம் இருக்கிறது. க்ரிப்டோ கரன்சியில் இடம்பெறும் இந்த நாணயமானது பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை நிவர்த்தி செய்ய ஒன்பிளஸ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை அறிவித்திருக்கிறது.
மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தொடர்ந்து 1000த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் ஆடியோ சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மிக முக்கியமான நிறுவனமான போட், மருத்துவமனைகளுக்கு உயர்தர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.