Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் விநியோகத்தை தடுத்தால்…. உடனே தூக்கு…. பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் வினியோகத்தை யாராவது தடுத்தால் அந்த நபரை தூக்கிலிடுவோம் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை 2 ஆம் அலை என்று அழைக்கிறோம். இது அலையல்ல சுனாமி என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Categories

Tech |