இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தலைநகர் டீலியிலேயே நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜன் எப்படியாவது கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஆக்சிஜன் வினியோகத்தை யாராவது தடுத்தால் அவர்களை கண்டிப்பாக தூக்கிலிடுவோம் என்று தெரிவித்துள்ளது.