Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. 2 பேர் படுகாயம்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வபோது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு அருகே கம்பீரமாக காட்டெருமை சாலையில் நடந்து சென்றது. சிறிது நேரத்தில் ஆக்ரோஷமாக காட்டெருமை சாலையோரம் நின்று கொண்டிருந்த கைலாசம் என்பவரையும், தனியார் ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த ஓட்டுனர் ரவி சந்திரன் என்பவரையும் முட்டி தூக்கி வீசியது.

இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் காட்டெருமை 2 பேரையும் முட்டி தூக்கி வீசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |