கான்சாஸ் மாகாணத்தில் சுழற்றியடித்த சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் கான்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சூறாவளியால் 22 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றானது வீசியது. இதனால் மக்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆண்டோவர் நகரில் சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கினர். மேலும் இந்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.