நடிகர் ரஜினிகாந்தின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான அழகிய நத்தம் தென்பெண்ணை ஆற்றுபாலம் அருகே நடந்து வருகின்றது.
இந்த நிலையில் ரஜினி நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆக்சன் காட்சி ஒன்றை ஒத்திகை பார்க்கும் நடிகர் ரஜினியின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவை தற்போது ரஜினி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.
Thalaivar Fitness level🔥🔥🔥#jailer pic.twitter.com/xSkbQM1Cbb
— Baabakumar (@baabakumar) October 14, 2022