நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தி க்ரே மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர் . இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து உற்சாகத்தில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.
@netflix @netflixindia @russo_brothers @ryangosling @chrisevans @preena621 pic.twitter.com/LK5u5ZnUG0
— Dhanush (@dhanushkraja) December 18, 2020
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கவுள்ள ‘தி க்ரே மேன்’ படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி . ஆக்ஷன் நிறைந்த இந்த படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு அன்பும், ஆதரவும் தந்த என் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி ‘ என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் தனுஷின் இந்தப் பதிவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.