Categories
தேசிய செய்திகள்

“ஆக்ஸிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தக்கூடாது”… வெளியான அதிரடி உத்தரவு..!!

ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் நிறுத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இதனால் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் விரைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் ஆக்சிஐன் எடுத்து செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |