இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இனவெறி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவியான ராஷ்மி சமந்த் என்பவர் தான் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் மணிபால் டவுனை சேர்ந்தவர்.
Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became the 1st Indian woman to head the Oxford University's union. This is encouraging & motivating for all of us, especially the youth & younger generation. pic.twitter.com/RNz8htdci4
— Digvijay Singh “Dev” (@digvijaysinghd9) February 18, 2021
இவர் மொத்தம் 3708 வாக்குகளில் 1966 வாக்குகளை பெற்று மாணவர் சங்க தலைவராக தேர்வானவர். இந்நிலையில் ராஷ்மி மீது இணையதளங்களில் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியதால் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் உலக புகழ் பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வான முதல் இந்திய பெண் ராஷ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.