நடிகர் விக்ரம் 7 வேடங்களில் நடிக்கும் புது வித ஆக்ஷன் திரில்லர் கொண்ட‘கோப்ரா படம் அடுத்த கட்டம் சென்றது.
விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். அவர் தற்போது ‘கோப்ரா’படத்தில் நடித்து வருகிறார். கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார், அவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்கள் எடுத்துள்ளார். விக்ரம்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இதில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்,இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது . இந்த படம் ஆக்ஷன், திரில்லர் என மாறுபட்ட கதை அம்சம் கொண்டது , இந்த படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்ற நிலையில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கின்றார்.
இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடக்கும் போது கொரோனா தொற்று அதிகம் ஆனது, இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழுவினர் நாட்டிற்கு வந்து விட்டனர். அதனால் மீதி எடுக்க வேண்டிய காட்சிகளை விரைவில் எடுக்க உள்ளனர். தற்போது கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட்டாக, படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் பெரும் எதிர் பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.