தமிழகம் முழுவதும் கொரோனாவால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காய்கறி, பழ மார்கெட்ட்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைபெறும் என்று வணிகர் சங்க தலைவர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட இருப்பதை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் – துணை முதல்வருடன் பேசி முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகம் தழுவிய அளவில் எல்லா மாவட்டங்களிலும் மார்க்கெட் இடங்களை அகற்றப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பிறகு பேருந்துகள் ஓட ஆரம்பித்த பிறகு அங்கிருந்த மார்க்கெட்டுகள் மாற்றப்பட்டு மிகவும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மழை காலம் என்பதால் இரண்டு நாள் தொடர்ந்து மழை பெய்தால் திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் நாங்கள் நினைத்தால் கூட வியாபாரம் செய்ய முடியாது. இப்பொழுது பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லாத நிலை ஏற்பட்டு, பசி ஏற்பட்டு இருவர் ரோட்டுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசிடம் முறையீட்டு இருக்கிறோம். இந்த மார்க்கெட் எங்களுடைய சொந்த மார்க்கெட். எங்கள் முன்னோர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.பத்திரப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.