கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே தமிழக அரசாங்கமும் கல்வி குறித்தும், மாணவர்களின் நலன் குறித்தும் பல அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது. பகுதிநேர பி.இ, பிடெக் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி புரிபவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை www.ptbe-tnea.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் சான்றிதழ் பதிவேற்றம் சரிபார்ப்பு பணி, கலந்தாய்வு ஆன்லைன்னில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.