கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் யோகா, உடற்பயிற்சி கூடம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இரவு நேரம் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய மத்திய அரசாங்கம், சுதந்திர தினத்தை தனிமனித இடைவெளியுடன், முகக்கவசம் கொண்டாடலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மஹாராஷ்ராவில் தினமும் புதுப்புது உச்சத்தை எடுத்துக்கொண்டு வேகம் கொரோனவை கட்டுப்படுத்த முழு முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா தான் நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தளர்வை தளர்வை அறிவித்த நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை முழு முடக்கத்தை நீடித்துள்ளது.