கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர்.
ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை பிடித்தவாறு பயணித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.