Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்காங்கே கண்ணிவெடி இருக்கு…! யூடியூபில் பார்த்தால் தெரியாது…. சிறுத்தைகளுக்கு திருமா அட்வைஸ் …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், தந்தை பாவலர் ஆ.பா.தமிழ் அன்பன் கூட எடுத்துச் சொன்னார், நிலம் எல்லாம் புதைந்து இருக்கும் சாதி கண்ணிவெடிகளை மிதிக்காமல் நடக்கிறாய், அதாவது நம்மை காலி செய்வதற்கு அங்கங்க சதி திட்டம் தீட்டுகிறார்கள், அந்த சதி வலையில் சிக்காமல் நெளிவு சுளிவாக போய்க்கொண்டு இருக்கிறாய். இதையெல்லாம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. இது எல்லோராலும் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாது. நம்மாளுகள் வந்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனே கணக்கு தீர்க்க வேண்டும் என்று நினைப்பான்.

போலீசாக இருந்தாலும் சண்டை போடுவான், சாதிக்காரனாக இருந்தாலும் சண்டை போடுவான், இந்த அரசியல்வாதிகள் எல்லாம் உடனடியாக அவர்களை விட்டு வெளியே வரணும். வெளியே வா கூட்டணியே வேண்டாம், எதுக்கு போய் 6 சீட்டுக்கு கையெழுத்து போட்ட, தன்மானத்தோடு நாம 234ல் நிப்போம் எல்லாம் டெபாசிட் இழப்போம் என்பான். இந்த நெளிவு சுளிவாக செய்வது அடிமைத்தனம் அல்ல. அது தந்திரம், தந்திரங்களிலேயே இராஜதந்திரம், தந்திரங்களில் உயர்ந்த தந்திரம் ராஜ தந்திரம்.

இப்போ அங்கங்கே அங்கங்கே நிலத்தில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பார்கள் எந்த இடத்தில் என்ன வெடிக்கும் எப்ப வெடிக்கும் என்று தெரியாது. கண்ணிவெடி வெடித்தால் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யுத்தகளத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும், யூட்யூபில் பார்த்தால் புரிந்து கொள்ள முடியாது, எழுத்தில் படித்தால் புரிந்துகொள்ள முடியாது. அப்படியே மொத்த வண்டியை அப்படியே தூக்கி விடும், காலை மிதித்தால் அவ்வளவு தான் முடிந்து போச்சு… சுக்குநூறாக சிதறிபோய் விடுவோம் அப்படியே.

அப்போ நீ வந்து வளர்ச்சி அடைய கூடாது ஒரு சக்தியாக பரிணாமம் அடைந்து விடக்கூடாது, நீ வெற்றிகரமாக உன் இலக்கை நோக்கி பயணித்து விடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே சாதி கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருக்கிறார்கள். அப்படி கன்னி வெடி இருப்பது கண்ணுக்கு தெரியாதுல்ல, அதை கூட மிதிக்காமல் நடக்கிறாய் என்றால் எவ்வளவு ஒரு பார்வையோடு இருக்கிறாய் அல்லது கெட்டிக்கார தனமாக இருக்கிறாய், அதை கண்டறியக் கூடிய ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறாய் என்பதை அவர் நுட்பமாக உணர்ந்து இருக்கிறார் அதுதான்.

அந்த மாதிரி நாம் அரசியல் செய்கிறோம் என்பதை எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடிகிறது. நீங்கள் யோசித்துப் பாருங்கள் 1990களிலிருந்து இப்போ 2021 வரை. 32 ஆண்டுகள் சமகாலத்த்தில் எத்தனையோ இயக்கங்கள் நம்மளை மாதிரி புறப்பட்டன. இன்றைக்கு எவ்வளவு பேர் இதில் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள், எத்தனை இயக்கங்கள் காணாமல் போயிருக்கின்றது, எத்தனை பேர் வேறு இயக்கங்களில் போய் கரைந்து போய் இருக்கிறார்கள், எத்தனை பேர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிப் போய் கிடக்கிறார்கள்.

பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் அரசியல் களத்திலே ஊக்கப்படுத்துவதற்கான எந்த பின்புலமும் இல்லாமல், ஊடக பின்புலம் இல்லாமல், சதி வலைகளை தாண்டி, சாதி கன்னி வெடிகளை தாண்டி 32 ஆண்டுகள் இந்த களத்திலே தாக்குபிடித்து ஒரு இயக்கம் நிற்கிறது என்றால், எந்த அளவுக்கு நெளிவு சுளிவாக நாம் பயணித்து இருக்கிறோம் என்பதை மன்னர் மன்னன் கண்டறிந்திருக்கிறார், உணர்ந்திருக்கிறார், நுட்பமாக பார்த்திருக்கிறார், நுணுக்கி பார்த்து இருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |