வெஸ்டர்ன் ஹெல்த் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் மூலம் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளுடன் கரோனா தொடர்பான கேள்விகளை கேட்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த CALD செயலி 10 மொழிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சொற்றொடர்களை உள்ளடக்கிறது. அந்த CALD செயலியில் அரபிக், காண்டோனீஸ், க்ரோஷியன், க்ரீக், இத்தாலி, மெசிடோனியன், மாண்டரின், செர்பியன், ஸ்பானிஷ், வியட்நாமிஸ் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கரோனா திரையிடல்களின்போது ஆங்கிலம் பேசாத நாடு மக்களுக்காக இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
இந்த செயலியில் கேட்கப்படும் கேள்விகளில் மருத்துவமற்ற கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 4 வாரங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியுள்ளீர்களா?
- கடந்த 14 நாள்களுக்குள் நீங்கள் கரோனா வைரஸ் நேர்மறை சோதனை செய்தீர்களா?
- இன்று உங்கள் சோதனைக்கு பிறகு, உங்கள் கரோனா வைரஸ் முடிவைப் பெறும்வரை நீங்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்.
- தயவுசெய்து ஒரு முகக்கவசத்தை அணிந்து நேராக வீடு திரும்பவும்.
இந்த செயலி முன்னதாக 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. CALD செயலியின் மூலம் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள், உணவியல் நிபுணர்கள், பேச்சு நோயியல் வல்லுநர்கள், பாதநல மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களிடையே தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டது.