மாவட்ட ஆட்சியர் கல்லறைத் தோட்டத்தை ஆய்வு செய்துள்ளார்.
சேலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பழமையான ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இந்தக் கல்லறை தோட்டத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமித்து இருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பழமையான ஆங்கிலேயர் கல்லறைகளை ஆய்வு செய்ததோடு, அதனுடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தி ஒரு பூங்காவாக மாற்ற வேண்டும் என கூறினார். இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சிஎஸ்ஐ தேவாலயநாதர் ஜவகர் வில்சன் ஆசீர் டேவிட், உதவி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவர்த்தினி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.