ஆங்கில எழுத்துக்கள் கூறாத 4 வயது சிறுவனை டியூஷன் ஆசிரியர் கொடூர முறையில் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கொச்சி அடுத்த பள்ளுருத்தியில் அரேங்கேறியுள்ளது. அதாவது டியூஷன் ஆசிரியர் நிகில் குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து நிகிலை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளுருத்தியிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் ஒருவர் குழந்தையை மரக்குச்சி கொண்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
பின் வீடு திரும்பியபோது சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். இதையடுத்து சிறுவனின் கை, கால்களில் ரத்த காயம் இருந்ததை பெற்றோர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் சிறுவனிடம் விசாரித்தபோது ஆசிரியர் அடித்ததை பற்றி தெரிவித்துள்ளார். உடனே காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். தற்போது காய்ச்சல் மற்றும் சளியால் குழந்தை எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.