Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை… மியான்மர் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதுவரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  மியான்மர் ராணுவ கோர்ட்டில் இன்று ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மேலும் ஏழு வருடங்கள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவரது மொத்த சிறை தண்டனை 31 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |