Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீதான வழக்கு… இன்று தீர்ப்பு வழங்குகிறது மியான்மர் ராணுவ நீதிமன்றம்…!!!!!

பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடு, கொரோனா விதிகளை மீறியது என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

இது குறித்த விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் அதன் பின்பு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை நீட்டித்துள்ளது. அதனை தொடர்ந்து இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் ஆங் சான் சூகி மீது மற்றொரு ஊழல் வழக்கில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதனையடுத்து தற்போது அவரது சிறை தண்டனை காலம் 26 வருடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று வழங்ககுகிறது.

Categories

Tech |