Categories
உலக செய்திகள்

ஆசிட் வீசிய காதலனை கரம் பிடித்த காதலி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக். இவர் பெர்பின் ஒசிக் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், காதலர்கள் இருவருக்குமிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி தனது காதலி பெர்பின் மீது ஆசிட் வீசியுள்ளாயுள்ளார்.

இதில் பெண்ணின் முகம் உடலின் பெரும் பகுதிகள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து ஹசிம் ஒசன் செடிக் கைது செய்யப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் இருக்கும்போது ஆசிட் வீசிய தனது முன்னாள் காதலியான பெர்பின்சிடம் தன்னை மன்னித்து விடுமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெர்பின் அதன் பின்னர் சிறையில் உள்ள தனது முன்னாள் காதலன் ஹசிமிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் மீண்டும் காதல் வளர வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில் தனி அறை சிறைச்சாலையில் தனது தண்டனையை அனுபவித்த பின், அந்த தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை 2022-மே மாதம் 31 வரை பிணையில் விடுதலை செய்ய துருக்கி அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சிறையில் இருந்த ஹசிம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் சிறையில் இருந்து வெளிவந்த தனது முன்னாள் காதலன் ஹசிமை திருமணம் செய்ய பெர்பின் ஒத்துக்கொண்டார். இதையடுத்து தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன் ஹசிமை பெர்பின் ஒசிக் திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் இணைந்து தம்பதியினராக வாழ்ந்து வருகின்றனர்.

Categories

Tech |