ஜின்டால் குழும்பத்தின் தலைவராக சாவித்திரி ஜின்டால் இருக்கிறார். இவருடைய கணவர் ஓ.பி.ஜின்டால் கடந்த 2005-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிறகு சாவித்திரி ஜின்டால் குழும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவருடைய சொத்து மதிப்பு 11.3 மில்லியன் டாலராகும். இந்நிலையில் ஆசியாவின் டாப் 10 பணக்கார பெண்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பணக்கார பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜின்டால் முதன்முதலாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவை சேர்ந்த பேன் ஹாங்வா 2-வது இடத்திலும், யாங் ஹூயன் 3-வது இடத்திலும் உள்ளார். மேலும் இதற்கு முன்பாக சீனாவை சேர்ந்த யாங் ஹூயன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.