ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் முதல் இடத்தை பிடித்துள்ளார் .
பிரிட்டன் வாரா இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக ஹிந்தி நடிகை ஆலியாபட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈஸ்டன் ஐ என்ற வார இதழ் ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது .இதில் ஆலியா பட் முதல் இடத்தையும் ,தீபிகா படுகோன் 2வது இடத்தையும் ,தொலைக்காட்சி நடிகை ஹினா ஹான் 3வது இடத்திலும் உள்ளனர் .இதேபோல் 5முதல் 10வரையிலான இடங்களை இந்திய பெண்களே பிடித்துள்ளனர் .அவர்களில் 6வது இடத்தை ஹிந்தி நடிகை கத்ரினா கைஃப் 10வது இடத்தில் பிரியங்கா சோப்ராவும் உள்ளனர் .