துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது . இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட சங்கரன்கோயில் எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் பொது கணக்கு குழு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது துருக்கியில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்றுள்ளார். இதைதொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.