Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை இவங்களுக்கு தான்….. ரொம்ப ஸ்ட்ராங்…. பாக். முன்னாள் கேப்டன் கருத்து..!!

ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி லீக் சுற்றில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

இன்னும் ஒரு வாரத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.. லீக் சுற்றுக்கு பின் சூப்பர் 4 சுற்றிலும் இந்த இரண்டு அணிகளும் மோத இருக்கிறது.. கணிப்பின்படி எல்லாம் சரியாக சென்றால் இந்த இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டியிலும் பல பரிட்சை நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அந்த அணியில் உள்ள வீரர்களின் பலம் மற்றும் திறமை இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.. அன்றைய நாள் அவர்களது நாளாக அமைந்து விட்டால் அவர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்.. மேலும் ஆப்கானிஸ்தான் அணியையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்..

Categories

Tech |