இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதுவரை இந்திய அணி 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி 5 முறை கோப்பையை கைப்பற்றுள்ளது. மீதமுள்ள 2 சீசன்களிலும் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியேற்றதற்கு இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்..
பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சில் திணறடிக்கும் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நம்பர் ஒன் பௌலர்களில் ஒருவரான பும்ரா அணியில் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார். நிச்சயம் அவர் காயத்திலிருந்து குணமாகி உலகக் கோப்பையில் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Indian pacer Jasprit Bumrah ruled out from Asia Cup due to back injury: Sources
(File Pic) pic.twitter.com/5Yc8ElsSfd
— ANI (@ANI) August 8, 2022