Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Asia Cup 2022 : இந்திய அணி அறிவிப்பு….. பும்ரா இல்லை….. கோலிக்கு இடம்…. இதோ லிஸ்ட்…!!

ஆசிய கோப்பை 2022 – க்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய  தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இதுவரை நடந்த 14 தொடரில் இந்திய அணி 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி 5 முறை கோப்பையை  கைப்பற்றுள்ளது. மீதமுள்ள 2 சீசன்களிலும் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்..

இந்நிலையில் ஆசிய கோப்பை 2022க்கான அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (வி.சி.), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர். பண்ட்  (wk ), தினேஷ் கார்த்திக் (wk ), ஹர்திக் பாண்டியா, ஆர்.ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஒய்.சாஹல் , ஆர் பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் தேர்வுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் தற்போது பெங்களூரில் உள்ள என்சிஏவில் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.

மூன்று வீரர்கள் – ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |