அமெரிக்காவில் 65 வயது பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய கறுப்பினத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று 65 வயது பெண் ஒருவரை எதிரில் வந்த கருப்பினத்தவர் திடீரென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு கொடூரமாக தாக்கினார் . அப்பெண்ணின் தலை மற்றும் இடுப்பில் தொடர்ந்து உதைத்ததில் இடுப்பு எலும்பு முறிந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த 2002ஆம் வருடம் அந்த நபர் அவரின் சொந்த தாயையே கொலை செய்துள்ளார்.
அதற்காக சிறை தண்டனை அனுபவித்து கடந்த 2019 ஆம் வருடம் தான் ஜாமினில் வந்துள்ளார். அந்த நபரின் பெயர் Brandon Eliet, வயது 38 என்று தெரியவந்துள்ளது. தற்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இவர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய போதும் கடையிலிருந்து 2 செக்யூரிட்டிகள் அவரை தடுக்காமல் நின்றுகொண்டிருந்தனர்.
அந்த இருவரும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். மேலும் நியூயார்க்கின் தற்போதைய மேயர் Bill De Balsio மற்றும் அடுத்ததாக மேயர் பதவிக்காக போட்டியிடவுள்ள Andrew Yang ஆகிய இருவரும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யாதவர்கள் மீது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
Andrew Yang ஆசிய இனத்தவர் என்பதால், அவர் கூறியிருப்பதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த பெண் நான் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் தான். ஏன் அவர் என் அம்மாவாகக்கூட இருந்திருக்கலாம். இந்த செய்தியை அறிந்தபோது எனக்கு என் அம்மா நினைவு வந்தார் என்று கூறியுள்ளார்.
தற்போது வெளியான செய்தியில், மனிதாபிமானம் இல்லாமல் பெண்ணை தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு செக்யூரிட்டி கார்டுகளும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.