மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நடப்பு சாம்பியனான இந்தியாவை சேர்ந்த சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 59 கிலோ எடைப்பிரிவில் சரிதா உள்ளிட்ட 5 பேர் பதக்கத்திற்கான சுற்றில் களம் இறங்கினர். அதில் ஜப்பான் மற்றும் மங்கோலிய வீரர்களிடம் தோல்வியை சந்தித்த சரிதா, அதன்பிறகு மற்ற இரண்டு வீராங்கனைகளை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுஷ்மா 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. முதல் இரண்டு நாட்களில் கிரேக்க ரோமன் மல்யுத்தப் பிரிவில் ஐந்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இதையடுத்து இந்திய வீராங்கனைகளுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.