நபர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி பின் கோடீஸ்வரராக மாறிய நிலையில் அவரின் சொத்து மதிப்பு தீடிரென சரிவடைந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜாக்மா என்ற நபர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து வலைதளங்களில் பல வகையான பொருட்களை விற்பனை செய்யும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதன் மூலம் மிகச் சிறிய காலத்தில் சீனாவின் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்தின் மதிப்பு 4.6 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜாக்மா இரண்டு மாதங்களுக்கு முன்பு வலைதளங்களில் நிதி சேவைகளை வழங்கும் ஆண்ட் என்ற நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் 2.6 லட்சம் கோடி ரூபாய் பெற முடிவு செய்துள்ளார். ஆனால் சீன அரசாங்கம் ஜாக்மா, ஆண்ட் நிறுவனத்தின் மூலம் அரசு வங்கி துறையை கட்டுப்பாட்டில் வைத்து விடுவார் என்று கருத்தியுள்ளது. அதனால் ஆண்ட் பங்கு வெளியீட்டிற்க்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அலிபாபா டென்ஷன்ட் போன்ற நிறுவனங்கள் கடந்த காலத்தில் கைப்பற்றிய நிறுவனங்களின் வரலாறுகளை தோண்டி எடுத்துள்ளது.
இதன் மூலம் சட்டமீறல்கள் நடந்துள்ளதாக கூறி அபராதமும் விதித்துள்ளது. மேலும் ஜாக் மா சீன நாட்டை விட்டு வெளியேறவும் தடைவிதித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் ஜாக்மா குழுமங்களின் நிறுவனகளின் சந்தை மதிப்பு இரண்டு மாதங்களில் 25 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஜாக் மாவின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் 3.62 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் போர்ப்ஸ் என்ற இதழில் உலகின் 500 பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 25வது இடத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.