Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியரை கீழே தள்ளி விட்டு…. மர்ம நபர்கள் செய்த செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

ஆசிரியரிடமிருந்து மர்ம நபர்கள் ஸ்கூட்டர், தங்க சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் லதா தனது செல்போன் மற்றும் 7 பவுன் தங்க சங்கிலியை ஸ்கூட்டர் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் மீனவன்குளம்- நாங்குநேரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டரை வழிமறித்து லதாவை கீழே தள்ளிவிட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் ஸ்கூட்டர், செல்போன் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |