Categories
மாநில செய்திகள்

ஆசிரியரை குறை சொல்ல கூடாது..! பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை…. ஐகோர்ட் அறிவுரை.!!

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேணச் செய்யும் ஆசிரியர்களை குறை சொல்லக்கூடாது. மாணவர்களின் நலனுக்காக நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள். மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் செயல்பட்டுள்ளார். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஆசிரியர் மீது குற்றம் சாட்டக் கூடாது. பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுகின்றன என்று கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |