Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட மாணவிகள்…. உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரண்டு தலித் மாணவிகள்ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தங்கள் மகள்களின் சீருடைகளை கழற்றி புகைப்படம் எடுக்கும் படி கூறியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்துள்ளது. மாணவிகள் நான்காம் வகுப்பில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு எட்டு மற்றும் ஒன்பது வயது இருக்கும். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜூலை 18-ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |