Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு வரும் வாரத்தில்…. குட் நியூஸ் அறிவித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில்  உள்ள பொன்மலை பகுதி மக்களிடம்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சிறுபான்மையான பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் அதற்கு முடிவு எடுக்க முடியவில்லை.

எனவே அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும். அதனை தொடர்ந்து சனிக்கிழமையில் பள்ளிகள் நடத்துவது என்பது இதற்கு முன்னதாகவே நடைமுறையில் இருந்தது. பள்ளிகள் நவம்பர் மாதம்தான் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படும் போது படிப்படியாக இந்த நடவடிக்கையை தளர்த்தப்படும்.

அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.அ தில் பாதிப்புகள் ஏதும் இருந்தால் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஏற்கனவே அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் உரிய வசதிகள் மற்றும் புதிய கட்டடம் கட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர்” கூறினார்

Categories

Tech |