ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.
ஆனால் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணபிக்க முடியவில்லை. மேலும் b.ed படிப்பிற்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதி தேர்வு எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.
மேலும் கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்த நிலையில், இந்த முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.