சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கு மே மாதம் முதல் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும். மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எந்த வேலையும் வாங்கக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Categories