செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை ஆசிரிய பெருமக்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அதற்கு என்று ஒரு லிமிட் இருக்கிறது. அதை தாண்டி கண்டிக்கிறார்கள் என்றால் அது வீடியோவாக வாட்ஸப்பில் வருகிறதை நாம் பார்க்கின்றோம். குழந்தையை பிரம்பால் அடிப்பது அந்த காலம். முடிந்து ஆனால், அதையும் மீறி சில இடங்களில் நடப்பது என்பது தான் தவிர்க்கப்பட வேண்டும்.
அப்படி லிமிட்டை தாண்டி மிருகத்தனமாக அடிக்கின்ற சூழ்நிலை வருகிறது என்றால் அதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்கபடும். தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே செய்தியாளர்களை பார்க்கும்போது சொல்வது ஒன்றுதான் ஜனவரி மாதம் ரிவிசன் தேர்வு நடைபெறும். ஜனவரி மாதம் முதல் ரிவிசன் டெஸ்ட், செகண்ட் ரிவிசன் மார்ச் மாதம் கண்டிப்பாக நடக்கும், இதில் எந்த குழப்பமும் யாருக்கும் தேவையில்லை.
போர்டு எக்ஸாம் வரும்போது ஏப்ரல் மாதத்தில் நடத்துவதா ? அல்லது மே மாதம் நடந்ததா என்பது அந்த போஷன் எப்படி முடிப்பது என அன்றைக்கு இருக்கக் கூடிய நிலையில் இருந்து முடிவு செய்வோம். ஜனவரி மாதம் முதல் ரிவிசன் எக்ஸாமுக்கு தயாராக இருங்கள், பொங்கல் கழித்தது வந்துவிடும். மார்ச்சு மாதம் இரண்டாவது ரிவிஷன். தயாராகிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். போர்டு எக்ஸாம் நடத்தாமல் போவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடையாது. கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றுதான் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.