அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு என அனைத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதராக உருவாக்குகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக மற்ற முடியும்.
இதனையடுத்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கூட பொருட்படுத்தாமல் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பணி புரிகின்றனர். மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் ஒரு சிறந்த உறவாக ஆசிரியர் பணி அமைந்துள்ளது. எனவே ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.