Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் கலந்தாய்வு… ஐகோர்ட் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிரடி உத்தரவு…!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்வியல் கவுன்சிலான என் சி டி இ யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறையானது 2012 தமிழகத்தில் அறிமுகமானது இந்த நிலையில் 2012ல் முதல் ஐந்து முறை ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்க தகுதி இல்லை என்ற அறிவித்தது. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க ஆணையிட கோரிய வழக்கில் டெட் தேர்வில் மற்றும் தேர்ச்சி பெற்றோர் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு  ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சிறப்பான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு தகுதிய காரணம் சிறந்த கல்வி தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Categories

Tech |