தென்ஆப்பிரிக்காவில் பள்ளி மலக்குழிக்குள் தனது கைபேசியை தவறவிட்ட ஆசிரியர் மாணவனை எடுக்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளியில் லுபெகோகண்டேல் என்ற ஆசிரியர் தனது கைபேசியை பள்ளி மலக்குழிக்குள் தவறவிட்டுள்ளார். அதனை எடுக்க முடிவு செய்த ஆசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவனை அழைத்து எடுத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு 13 டாலர் கூலி தருவதாகும் கூறியுள்ளார். ஆசிரியர் சொன்னதை கேட்ட மாணவன் மலக்குழிக்குள் கயிறுகட்டி இறக்கப்பட்டான். பின்னர் கைபேசியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் உடல் முழுவதும் மலத்தோடு வெளிவந்த மாணவனை அவனது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.