மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியில் மருதை(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதை மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மருதையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.