ஆசிரியருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் பூந்தோட்டத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பத்து வயதுடைய 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அசோக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக் சோ சிறப்பு நீதிமன்றம் அசோக் குமாருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஒரு மாதத்திற்குள் இரண்டு லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.