Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு… ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் சான்றிதழ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் படி சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இனி வரக்கூடிய காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் அனைவருக்கும், ஆயுள் முழுவதும் செல்லுபடியாக கூடியவகையில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆயுள் சான்றிதழ் மீட்டிற்கு வழங்குவது பற்றி சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு கூறியுள்ளது.

 

Categories

Tech |