ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.