ஆசிரியர் தகுதி தேர்வில் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை தாள் 1- க்கு கணினி வழியில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் trb.tn.nic.in கணினி வழி தேர்வுக்கான பயிற்சியை தேர்வுகள் மேற்கொள்ளலாம். இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு 26 ஆம் தேதி உடன் முடிவடைந்தது.
அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தாள் 1-க்கு மட்டும் முதல் கட்ட தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.