Categories
அரசியல்

ஆசிரியர் நியமனத்தில்…. வயது வரம்பை உடனே நீக்குங்க…. ராமதாஸ் சூப்பர் கோரிக்கை…!!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வயதுவரம்பு நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால் 40 வயதை கடந்த பட்டதாரிகள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது .

ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் கூட அந்தப் பணிக்கு புதிதாக வயது வரம்பு நியமிக்கப்பட்டிருப்பது பெரும்பான்மையான பட்டதாரிகளினுடைய ஆசிரியர் கனவை தகர்த்தது. வருடத்திற்கு ஒருமுறை ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளாத அரசுக்கு அதற்கான வயது வரம்பை நிர்ணயிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. வயதுவரம்பு உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |