Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு…. ஆகஸ்ட் 3 வரை அமலாக்கத்துறை காவல்….. அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி….!!!!!!!!

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் வருடம் வரை மாநில கல்வி துறை மந்திரியாக  செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணம் மாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமலாக்க துறையில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் கொல்கத்தா நாக்தலா  தான் பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்க  துறையினர் சோதனை மேற்கொண்டனர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் ஆசிரியர் நியமன  முறைகேட்டுடன் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையில் இருந்து கடந்த 23ஆம் தேதி மாலை கைது செய்துள்ளனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மந்திரி பார்த்தா திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

லேசான மூச்சுத் திறனல்  ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மாநில அரசின் எஸ் எஸ் கே எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள்  சட்டர்ஜி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா   14 நாட்கள் சிறைகாவலில்  எடுத்து விசாரணை செய்ய கொல்கத்தா கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை  நேற்று விசாரித்த கோர்ட் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதாவை  10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 23ஆம் தேதி கைதான பார்த்த சட்டர்ஜி  போன்றோரை ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்  அனுமதி வழங்கி இருக்கிறது.

Categories

Tech |