2020- 21 ஆம் வருடம் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று, கம்பியூட்டர் பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,030 பேரை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2,207 ஆக இருந்த காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 3,237 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் செய்து, முன்பு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் கூடுதலாக 1,030 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.